நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் அமமுக கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலரில் 90க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் அமமுக கைப்பற்றிய பெரும்பாலான இடங்கள் அதிமுக செல்வாக்கு மிகுந்த இடங்கள் என்றும் சொல்லப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கிடைக்காத சிலர் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அமமுக சேர்ந்த மாநில அம்மா பேரவை தலைவர் புலவர் பி.எச்.சாகுல்ஹமீது, மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிங்கை பிரதீப்குமார், மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் ஆர்.கோபிநாத் ஆகியோர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இது தினகரன் கட்சிக்குள் இருப்பவர்களை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.