பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையிலுள்ள சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திக்கவிருக்கிறார்.
இந்த சந்திப்பு இன்று நடைபெறுகிறது. இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அமமுக அடைந்த தோல்வி குறித்தும், அமமுக எதிர்காலம் குறித்தும் பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவை சென்னையில் ஆஜராக கூறியதும், ஆனால் அவர் ஆஜராகாததும் குறிப்பிடத்தக்கது.