தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.இந்த நிலையில் கொங்கு மாவட்டத்தில் ஒன்றான திருப்பூர் நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தது தினகரன் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ammk

admk

ammk

Advertisment

அமமுக-வின் மாநில தேர்தல் பிரிவு இணை செயலாளரும், திருப்பூர் மாவட்ட முன்னாள் செயலாளரும், நாடாளுமன்ற சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு.திருப்பூர் C.சிவசாமி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் 275 நிர்வாகிகள் உட்பட 500 பேர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உடன் இருந்தார். மேலும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, பொன்னையன், வைத்தியலிங்கம் எம்.பி ஆகியோரும் இருந்தனர். தினகரன் கட்சியில் தினமும் பல்வேறு நிர்வாகிகள் வெளியேறி வருவதால் தினகரன் கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.