Skip to main content

கட்சியை காப்பாற்ற தினகரன் போட்ட பக்கா ப்ளான்!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. அதிமுகவின் வாக்குகளை அதிக அளவில் தினகரன் பிரிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 6 சதவிகித வாக்குகளை மட்டுமே  பெற்றார். மேலும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தார். தினகரன் கட்சியில் முக்கிய புள்ளிகளாக இருந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தனர். மேலும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர். 
 

ttv



இதனால் தினகரன் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்தார். இந்த நிலையில் கட்சியை வலுப்படுத்த தினகரன் புது ஆலோசனையில் இறங்கியதாக சொல்லப்படுகிறது. கட்சியின் முக்கியப் பதவிகள் மற்றும் பொறுப்புகளை இளைஞர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். மேலும் வெற்றிவேல், பழனியப்பன், புகழேந்தி மற்றும் ஒரு சில முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க உள்ளாராம். இதனால் கட்சியை இளைஞர்களை வைத்து வளர்க்க திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

'பதில் சொல்லுங்க சார்...'- தேர்தல் பறக்கும் படையினரிடம் இரவில் வாக்குவாதம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'Answer me sir...'-Argument at night with election flying soldiers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மறுபுறம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் சுவர் விளம்பரங்கள் மறைக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு சரியான ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம் மட்டும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் 47 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த நிலையில் பணத்தை கொண்டு வந்த நபர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோம்புபள்ளத்தில் காரில் சென்றவர்களிடம் தாசில்தார் மாரிமுத்து தலைமையிலான பறக்கும் படை குழுவினர் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த 47 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். 50,000 ரூபாய் வரை மருத்துவ செலவுக்காக எடுத்துச் செல்லலாம் எனக்கு கூறப்பட்டிருக்கும் நிலையில் 47 ஆயிரம் ரூபாயை நீங்கள் பறிமுதல் செய்துள்ளீர்கள் என அதிகாரிகளுடன் காரில் சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'உங்களுக்கு தேர்தல் பறக்கும் படை வேலை இருக்கிறது என்றால் எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா? ஹாஸ்பிடலுக்கு கட்டுவதற்காக 47 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டுப் போக முடியாதுன்னு சொல்றீங்க. எப்படி சார் எடுத்துட்டு போகாம இருக்கிறது. செய்தியில் சொல்றாங்க 50,000 வரை எடுத்துக்கொண்டு போலாம்னு. அதுவும் ரவுண்டா ஐம்பதாயிரம் கூட இல்லை 47,000 தான் இருந்தது. அந்த ஜி.ஓ வ எங்களுக்கு கொடுங்க. எங்கள் பணத்தை நாங்கள் எலக்சன் முடிஞ்ச பிறகு கூட வாங்கிக்கிறோம்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வேட்பாளர்கள் யார்?- விசிக அறிவிப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிதம்பரத்தில் ஏற்கனவே போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அண்ணா அறிவாலயம் அழைத்து சென்று முதல்வரை சந்தித்து ஆசிபெற்று வரும் நிலையில் இன்று விசிக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாகவே செய்தியாளர் சந்திப்புகளில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், ''இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அடையாளப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு இன்று முக்கியமான தேவையாக இல்லை. பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது. ஆகவே இந்திய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஒட்டுமொத்தத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் இன்று மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் ஒருபுறமும் சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறது. நாட்டு மக்கள் ஒருபுறம் நிற்கிறோம் பாரதிய ஜனதா தலைமையிலான சங்பரிவார் ஒருபுறம் இருக்கிறது. எனவே இங்கு யுத்தம் நடப்பது காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் அல்ல, அல்லது இந்தியா கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் அல்ல. மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையிலான யுத்தம் தான் இது''என்றார்.