நாட்டின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதிவரை நாடு முழுக்க மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் அமமுக சார்பில் தென்காசி தொகுதியில் ஏ.எஸ்.பொன்னுதாய் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தென்காசி பாராளுமன்றத்திற்குட்பட்ட இடங்களில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது அவர், “மோடி கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தில் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நம்மிடையே பிரிவினையை உருவாக்கிவிடுவார்கள். ஆகவே மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி முடிந்தால்தான், தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும். கடந்த முறை மோடிக்கு வாக்களிக்காத கோபத்தில்தான் தமிழகத்தை அவர் புறக்கணித்தார்” என பிரச்சாரம் செய்தார்.