TTV Dinakaran comment about admk

"அதிமுக கட்சி அல்ல,கம்பெனி; மடியில் கனம் இருப்பதால்தான்எதிர்க்கட்சியாகஅதிமுக செயல்பட முடியவில்லை" என்று அமமுக பொதுச்செயலாளர்தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

நாகையில் சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்த அம்மா மக்கள்முன்னேற்றக்கழகத்தின் நிர்வாகி ஒருவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கதினகரன் இன்று நாகை வந்தார். அப்போது செய்தியாளர்களைச்சந்தித்துப்பேசியவர், "அதிமுக கட்சி அல்ல,கம்பெனி. வியாபாரகம்பெனியானஅதிமுகவில், அதிக முதலீடுசெய்தவர்களுக்குத்தான்பொறுப்பு. பாஜகஎதிர்க்கட்சிகிடையாது, ஆளும் கட்சியை எதிர்ப்பவர்கள் அனைவருமேஎதிர்க்கட்சிதான். மடியில் கனம் இருப்பதால், ஒருஎதிர்க்கட்சியாகஅதிமுகவால்முறையாகச்செயல்படவில்லை” என்று தெரிவித்தார்.