அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை வகித்தார். வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தமிழன் உள்பட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

ttv dinakaran ammk interview

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,

நாங்கள் வெற்றியை எதிர்பார்த்தோம். கிடைக்கவில்லை. ஆகையால் அரசியல் கட்சியை வைத்துக்கொண்டு வீட்டில் முடங்கி கிடக்க முடியுமா? தேர்தல் முடிவுக்குப் பின்னர் 3 நாள் கழித்தவுடனேயே பத்திரிகையாளர்களை சந்தித்தோம். அந்த அளவுதான் தேர்தல் முடிவுகள் பாதித்தது. வெற்றியை எதிர்பார்த்தது உண்மை. அதே நேரத்தில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். கட்சி நிர்வாகிகள் கருத்துக்களைக் கேட்டு, அடுத்தக்கட்டமாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினோம். வேட்பாளர்கள் வந்திருந்தார்கள்.

வேலூர் பாராளுமன்றத் தேர்தல், நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசினோம். நாங்குனேரி வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கவில்லை. வேலூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாண்டுரெங்கன்தான். திட்டமிட்டு எந்த திட்டத்தையும் தமிழ்நாட்டின் மேல் திணித்தால் அதனை மக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி மொழியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களுக்காக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம்.

Advertisment

ttv dinakaran ammk interview

தேர்தல் முடிவுக்கு பிறகு நான் சசிகலாவை சந்திக்கும் முன்பே அவர் டிவியில் தேர்தல் முடிவுகளை பார்த்து தெரிந்துகொண்டார். இந்த தேர்தலில் நமக்கு வெற்றிக்கிடைக்கவில்லை என்பதால் மனம் தளராமல் எல்லோரும் ஒற்றுமையாக சரியாக செயல்பட சொல்லுமாறு கூறினார். 89ல் இருந்து பல தேர்தல்களை சந்தித்தவர்.

அமமுகவில் இருப்பவர்கள் ஆட்சி அதிகாரத்தையெல்லாம் தாண்டி ஜெயலலிதாவின் இயக்கம் என்றுதான் இருக்கிறார்கள். ஒரு சிலர் போகலாம். அரசியல் கட்சியில் ஒரே இடத்தில்தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. யாரும் எந்தவித கட்டுப்பாடுடன் இல்லை. சுயமாக சிந்தித்துதான் இங்கு வருகிறார்கள். தேர்தல் களத்தில் தோற்றதால் நாங்கள் அழிந்துவிட்டோம் என்று யாராவது நினைத்தால் அது அவர்களுடைய அறியாமை. இவ்வாறு கூறினார்.