TTV DHINAKARAN PRESSMEET AT CHENNAI

Advertisment

சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில், அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலாவைச் சந்தித்தார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளநிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிடிவி.தினகரன், "சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சுபவன் நான் இல்லை என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். தமிழக மக்களின் ஆதரவுடன் அ.ம.மு.க. வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது. மக்கள் எங்களை நிராகரிக்கும் வரை நாங்கள் அரசியலில் இருப்போம். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. மார்ச் 9- ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணக்கமாகப் போகாது" என்றார்.