sarkar issue

Advertisment

பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் சந்தித்தார். இந்த சந்திப்பிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பழனியப்பன், இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்று எடுத்த முடிவை சசிகலாவிடம் தெரிவித்தோம். அவரும் இது சரியான முடிவுதான் என்றார். நாங்கள் 18 பேரும் ஒத்த கருத்தோடு உள்ளோம் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய தினகரன், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரியானது என்றும் இடைத்தேர்தல் சந்திப்பது சரி தான் என சசிகலா கூறினார். 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தால் அதனை சந்திக்க தயார்.

Advertisment

சர்கார் பட விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் அணுகுமுறை தவறானது. நடுநிலையுடன் சர்கார் படத்தை எடுக்கவில்லை. இலவச தொலைக்காட்சியை எரித்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இந்தியா வளர்ந்த நாடல்ல, வளர்ந்து வரும் நாடு. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தத்தான் இலவசங்களை தலைவர்கள் அறிவித்தார்கள். வழங்கினார்கள்.

மக்களை திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை? என கேள்வி எழுப்பினார்.