அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

ttv

அப்போது அவர், தஞ்சை பெரிய கோவிலில் இருமொழிகளிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை வரவேற்கிறோம். குரூப் 4 முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

தமிழக அரசின் ஊழல்கள் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்குப் பிறகு வெளிவரும். கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும். அதுபோலவே தமிழக அரசின் ஊழல்கள் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்குப் பிறகு வெளிவரும் என தெரிவித்தார்.

Advertisment

தமிழகத்தில் அரசன் எவ்வழியோ அவ்வழியே நாடும் உள்ளது.எடப்பாடி பழனிசாமி கம்பெனி எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். அது ஒரு கம்பெனியா நடக்கிறது என்றார்.