முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டார். இவருக்குஜாமின் மறுக்கப்பட்டது முதலே இவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக பல பரபரப்புகள் கிளம்பியது. இதற்கிடையில் இவர் எங்கு இருக்கிறார் என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தன. அமலாக்கதுறையினரும், சிபிஐ அதிகாரிகளும் சிதம்பரத்தின் நேற்று முன்தினம் அவரது வீட்டில் முகாமிட்டிருந்தனர்.

Advertisment

xdfg

இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியானது. அப்பொழுது முதல் சிதம்பரத்தின் கைது குறித்த மீம்களும் அதிகமாக வெளியாக துவங்கிவிட்டன. அதில் 2009ல் அமித்ஷா கைது செய்யப்பட்டதையும், 2019ல் சிதம்பரம் கைது செய்யப்பட்டதையும் குறிக்கும் வகையில் ஒரு ஜெயில் புகைப்படம் ஒன்றை இணையவாசி ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைத்தாண்டி சிபிஐ அதிகாரிகளுக்கு பயந்து ப.சிதம்பரம் உசேன் போல்டையும் தாண்டி வேகமாக ஓடுவதை போன்றும் புகைப்படங்கள் பகிரப்படுகிறது.