Advertisment

திரிபுரா; பாஜகவிலிருந்து விலகும் எம்.எல்.ஏக்கள்

Tripura; MLAs Quitting BJP

Advertisment

திரிபுராவில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 20 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக - ஐபிஎஃப்டி கூட்டணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் மீண்டும் திரிபுராவில் ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது. மேலும், 2023 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் சிபிஎம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் 5 பாஜக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். பாஜக கூட்டணியில் உள்ள ஐபிஎஃப்டி கட்சியிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் என இதுவரை 8 பாஜக மற்றும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

Advertisment

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரிபுராவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

thiripura
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe