ADVERTISEMENT

திருச்சி மார்கெட்டில் நுழைந்த அரசியல் - ஆபத்தில் பொதுமக்கள்! -பதட்டத்தில் அதிகாரிகள் 

11:00 AM Apr 25, 2020 | rajavel


திருச்சி காந்தி மார்கெட்டிற்குப் பதில் பழைய பண்ணையில் தற்காலிக சந்தை இயங்கி வந்தது. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமலும், கரோனோ விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

ADVERTISEMENT


ADVERTISEMENT



ஆனால் இதையும் மீறி மக்கள் தொடர்ந்து கூட்டமாக வருவதால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சந்தையை பால்பண்னை பகுதியிலிருந்து அதிக இட வசதி கொண்ட சமயபுரம் ஆட்டுச் சந்தைக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த அறிவிப்பு வெளியான உடனே திருச்சியில் காந்தி மார்கெட் வியாபாரிகள் சங்கங்களில் மொத்தம் 24 சங்கங்கள் இணைத்து இதை ஏற்க முடியாது. காந்தி மார்கெட்டில் மீண்டும் வியாபாரம் செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இடநெருக்கடி மற்றும் சமூக விலகல் இல்லாமல் இருப்பதால் ஏற்பட போகும் பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பேசினார். ஆனால் இதை எதையுமே வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் வெல்மண்டி நடராஜன் வேண்டுகோளுக்கு இணங்க ஊரடங்கு முடியும் வரை அதாவது 3- ஆம் தேதி வரை பால்பண்ணையில் தொடர்ந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

கரோனோ பிரச்சனையினால் மார்கெட் விவகாரத்தில் சமயபுரத்திற்கு மாற்ற வேண்டும் என்று கலெக்டர் உறுதியாக இருக்கிறார். மார்கெட் காரணமாக கரோனோ தொற்று அதிகமானல் திருச்சியில் நிலைமை மோசமாகிவிடும். திருச்சி மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் மார்கெட்டை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

ஆனால் அரசியல்வாதிகள் மற்றும் பெரும் பணக்காரர்களின் தலையீடு காரணமாக மார்கெட் பிரச்சனை இப்படிச் சிக்கிச் சீரழிவது திருச்சி மக்களைப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும் என்பது தன்னார்வலர்களின் கருத்தாக உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT