publive-image

அண்ணாமலை அனுப்பினார் என திருச்சி சூர்யா என் அலுவலகம் வந்தார் என அலிஷா அப்துல்லா பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Advertisment

பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் பாஜகவில் சேர்ந்ததற்கு காரணம் அண்ணாமலை தான். நான் பாஜகவில் சேர்ந்து 10 நாட்கள் கழித்து திருச்சி சூர்யா எனக்கு போன் செய்தார். நான் திருச்சி சூர்யா என அறிமுகப்படுத்திக் கொண்டார். யார் உங்களுக்கு என் செல்போன் நம்பரை கொடுத்தார்கள் எனக் கேட்டேன். அண்ணாமலை தான் நம்பர் கொடுத்தார் எனச் சொன்னார். கட்சியில் புதிதாக சேர்ந்துள்ளீர்கள் என்பதால் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக நம்பரை கொடுத்தார் எனக் கூறினார்.

Advertisment

நான் போனில் பேச முடியாது. நேரில் அலுவலகத்திற்கு வாருங்கள் எனக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். காலை 11 மணியளவில் அலுவலகம் வந்தார். இதன் பின் தற்பெருமை பேசஆரம்பித்து விட்டார். காதுல ரத்தம் தான் வரல.. அவ்வளவுபேசினார்.

விளையாட்டுப் பிரிவில் இருக்க வேண்டாம். பெண்கள் நலன், இல்லையென்றால், சிறுபான்மையினர் நலப் பிரிவிற்கு வாருங்கள். அண்ணாமலை தான் சொன்னார் என திருச்சி சூர்யா கூறினார். அவர் சென்ற பின் உடனடியாக நான் அண்ணாமலைக்கு இது குறித்தகுறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் நான் யாரையும் அனுப்பவில்லை,தயவுசெய்து இதை நம்பாதீர்கள் எனக் கூறினார். திருச்சி சூர்யா என்னை பாடி ஷேமிங்செய்தார். இவை அனைத்தையும் கட்சியின் விதிமுறைப்படி அமர்பிரசாத் ரெட்டியிடம் சொல்லிவிட்டேன். நான் சொன்ன அனைத்தையும் அமர்அண்ணாமலையிடம் கூறினார்.

Advertisment

என் அலுவலகத்தில் 23 கேமராக்கள் இருக்கிறது. இது சிசிடிவி கேமராக்கள். அது ஹனி ட்ராப் இல்லை. நான் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை. பாஜக தலைவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார். அனைத்திற்கும் ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால், அதை வெளியிடுவதற்கு நான் மோசமானவள் இல்லை” எனக் கூறியுள்ளார்.