Advertisment

நாடாளுமன்றத்தை வியக்க வைத்த திருச்சி சிவா!

தனியாளாக தேர்தலைச் சந்தித்து நாடு முழுவதும் ஆதரவுகளைக் குவித்து, நாடாளுமன்றத்தில் பெருமதிப்பைப் பெற்றிருக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.

Advertisment

trichy Siva

டெல்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப் ஆஃப் இந்தியா ஒரு உயரிய மதிப்பு மிக்க கிளப். அதன் நிர்வாக கமிட்டி தேர்தல் நடைபெற்றது.இந்தத் தேர்தலில் பலரும் அணியமைத்து போட்டியிட்ட நிலையில், தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தனிஆளாக தேர்தலை எதிர்கொண்டார். இதில் அணி அமைத்தவர்கள் 114 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், திருச்சி சிவா தனித்த வேட்பாளராகவே நூறு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

பல கட்சிகளின் உறுப்பினர்களும் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள், பஞ்சாப், ஒடிசா, உ.பி, குஜராத், மே வங்க மாநில அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளோடு, மத்திய அமைச்சர்கள் சிலரும் திருச்சி சிவாவிற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதைக் கண்டு, போட்டியிட்ட மற்றவர்களே வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தனித்து நின்று திருச்சி சிவா அவர்கள் 100 வாக்குகளை பெற்றிருப்பது நாடாளுமன்ற அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

politics India Parliament trichy siva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe