Corona

திருச்சியில் டெல்லி சென்று வந்ததாக 121 பேர் கண்டறியப்பட்டு, அவர்களில் 36 பேருக்கு நோய் இருப்பதாக முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 69 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி 75 வயது மூதாட்டி, 25 வயது வாலிபர், 35 வயது ஐஸ் வியாபாரி, ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரி நான்கு பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 60 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Advertisment

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளராக திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பணியாற்றி வருகிறார். சென்னையில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை அவசர கூட்டம் நடந்தது. இதில் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். அவருடைய உதவியாளரும் சென்றிருந்தார்.

இந்த நிலையில் உதவியாளர் மீண்டும் ஊருக்கு திரும்பும்போது, அவருக்கு கரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கரோனோ தொற்று இருப்பது போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவினர் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்துஅவர்கள்அனைவரும் வீட்டிலேயேதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவருடன்தொடர்பில் யார்,யார் இருந்தார்கள்என கண்டறிந்து, அவர்கள்அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அமைச்சரின் உதவியாளர் ஏற்கனவே திருச்சி மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment