trichy east constituency

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு திமுக சார்பில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.கிழக்குதொகுதி மிகச் சிறிய சட்டமன்றத் தொகுதி என்பதால் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்குஇடையே இந்த தொகுதியை தன்வசப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திமுகவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இருவரும்இப்பகுதியைக் கேட்டுக்கொண்டிருந்தனர். இதனிடையே கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜுக்கு திருச்சி கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது திமுகவில் இணைந்து கட்சியின் உறுப்பினராகி அடையாள அட்டை பெற்றுக்கொண்டுள்ளார். அதேபோல் திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.