முதல்வருக்கு நன்றி தெரிவித்த திருச்சி திமுகவினர்

trichy dmk passed two resolution thanks to cm mk stalin

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் பேரூர் அவைத்தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்திற்கு அரசு சார்பில்நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தமிழ்நாடு காகித ஆலையின் இரண்டாவது கிளை துவக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகின்ற 29 ஆம் தேதி திருச்சிக்கு வருகை தரவிருக்கும் தமிழகமுதல்வர்மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் திருச்சி விமான நிலையம் முதல் மணப்பாறை வரை உற்சாக வரவேற்பு அளிப்பது எனவும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe