trichy dmk Lawyers team meeting -

திருச்சி மேற்கு மத்திய மண்டல தி.மு.க வழக்கறிஞர்கள் அணியைச் சேர்ந்தஅனைவரையும் அழைத்து, அவர்களுடனான தேர்தல் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் அனைவரையும் வரவேற்றார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், இந்தக்கூட்டத்தின் நோக்கம் தேர்தலில் நமக்குப் பதிவாகும், ஒவ்வொரு 50 வாக்குகளும் நமக்குத் தான் பதிவாகி உள்ளதா என்பதை நாம் பார்க்கமுடியும். எனவே, அந்தப் பணிகளை வழக்கறிஞர்கள் கண்காணிக்க வேண்டும்.

கடந்த தேர்தலில், 234 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் 15,000 வாக்குகள் அதிகமாக இருந்தன.

Advertisment

பொதுவாக ஒரு தொகுதிக்கு ஒதுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தால், புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த, 10 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்படும். அப்படி மாற்றி பயன்படுத்தும்போது அந்த இயந்திரத்தில் எத்தனை வாக்குகள் பதிவாகி உள்ளது என்பதைக் கணக்கிட வேண்டும்.

இந்த தேர்தலில், 2,500 வழக்கறிஞர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். நான், வழக்கறிஞர்களின் முக்கியத்துவத்தை ஜெயலலிதா இருந்தபோது தான் உணர்ந்தேன். ஜெயலலிதா இல்லை என்றால் வழக்கறிஞர்கள் யார் என்று தெரிந்திருக்காது. அதன் பிறகு தான் நீதித்துறையின் தேவையும், அவசியமும் குறித்த அறிவு, எங்களுக்கு வந்திருக்கிறது என்று கூறினார்.