trichy collectorate ambedkar issue in vck

Advertisment

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனோடுதொடர்புடைய அமைப்புகள், பல்வேறு தலைவர்களை அவமதிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. திருவள்ளுவர், பெரியார் ஆகியோரைத்தொடர்ந்து, தற்போது அம்பேத்கருக்கு காவி நிற ஆடை, திருநீறு, குங்குமம் இட்டு அவமதிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகளைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள்கட்சிசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டச் செயலாளர் அருள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தலைவர்களை அவமதிக்கும் விதமாக செயல்படும் அமைப்பின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும்வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை தொழிலாளர் முன்னணியின் மாநிலத்துணைச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.