Advertisment

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆபாச பேச்சு!!! வழக்கு பதியுமா காவல்துறை?

admk

Advertisment

திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் குறிப்பிட்ட சமூக பெண்களை ஆபாசமாக பேசியதை கண்டித்து வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தனி தனியே கண்டன போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி மாநகர் மாவட்டத்தில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் ஆவின் பெருந்தலைவர் கார்த்திகேயன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, பூபதி, நாகநாதர் பாண்டி மலை கோட்டை அய்யப்பன், டாக்டர் சுப்பையா, தமிழரசிசுப்பையா, அருள் ஜோதி, வக்கில் எட்வின் ஜெயகுமார், வக்கில் தாமரை செல்வன், கிருஷ்ணவேணி, ஜாக்குலின் கூட்டுறவு அமைப்பு தலைவர்கள் பத்மநாபன், ஏர்போர்ட் விஜி, கேபிள் முஸ்தபா, பாபு, இலியாஸ், சையது அன்வர் அப்பா குட்டிகட்பிஸ் ரமேஷ் உட்பட பலர் கலந்து கெண்டனர். தியாகராஜனை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன.

admk

Advertisment

இதில் தலைமை பேச்சாளர் நெத்தியடி நாகையன் கண்டன உரை ஆற்றினார். ஆரம்பத்தில் தியாகராஜனை கண்டித்து பேசியவர், பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல்ஆபாசமாக பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. பெண்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆபாசமாக பேசியதும், இதில் சோழிய வேளாளர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

காடுவெட்டி தியாகராஜன், தான் பெண்களை இழிவுபடுத்தி பேசவில்லை. பேசி இருந்தால் மன்னிக்கவும் என பொது மன்னிப்பு கேட்ட நிலையில் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் மாவட்ட செயலாளராக உள்ள மாநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையனின் பேச்சை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட துணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட மகளிர் அணி செயலாளர் டாக்டர். தமிழரசி சுப்பையா உட்பட மகளிர் அணியினர் முகம் சுழித்து காதை பொத்தியடியே ஆர்ப்பாட்டத்தை விட்டு கலைந்தனர்.

ddd

மேலும் இளம் பெண்கள் பாசறை மூலம் வந்த இளம் பெண்கள் வெட்கப்பட்டு சீ... சீ... தூ... தூ... என கூறியபடியே கலந்து சென்றனர். தொடர்ந்து நெத்தியடி நாகையன் பேசிய பேச்சை உளவு துறை போலிசார் பதிவு செய்தும், 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தடை உத்தரவு மீறிய அ.திமுக. நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து ஆபாசமாக பேசியதால் ஆண்களே சிலர் வெளியேற பெண்களும் வெளியேற வாகனத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள் நாகையனை தடுக்காமல் நின்றது அ.தி.மு.க பெண்களிடையே அதிருப்தி உருவாக்கியது.

ஆபாசமாக பேசிய நெத்தியடி நாகையன் மீதும் வழக்கு தொடர ஆலோசிக்கப்படும் என்றனர் காவல் துறையினர். திமுகவினரை ஆபாசமாக பேசிய அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன் மீது தி.மு.க.வினர் மாநகரகாவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்க உள்ளனர்.

trichy admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe