TRB Raja DMK IT Secretary

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராகப்பணியாற்றி வந்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், அரசுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக, திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்தார். அக்கடிதத்தை ஏற்றுக் கொண்டு, அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, திமுக சட்டதிட்ட விதி: 31 - பிரிவு: 19-ன்படி அவருக்குப் பதிலாக திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisment

TRB Raja DMK IT Secretary

Advertisment

அதேசமயம், அயலக அணிச் செயலாளராக பணியாற்றி வந்த டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ., திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், திமுக சட்டதிட்ட விதி: 31 - பிரிவு: 20-ன்படி அவருக்குப் பதிலாக, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவை அயலக அணிச் செயலாளராக நியமித்து திமுக தலைமை செய்தி வெளியிட்டுள்ளது.