
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவிப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். மேலும், இதனை தானே கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அ.தி.மு.கதலைமை அலுவலகத்தில் அறிவித்தார்.
கட்சியின் மூத்த தலைவர்கள், மூத்த அமைச்சர்களுடன்பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஓ.பன்னீர்செல்வம் இதற்கு ஒப்புதல் அளித்ததால், அவரது மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சராகும் வாய்ப்புக்கு பச்சைக்கொடி காட்டினார் எடப்பாடி பழனிசாமி.
இந்தநிலையில், ரவீந்திரநாத் மொரிசியஸ் நாட்டுக்குத் தனது நண்பர்களுடன் தனி விமானத்தில் சென்றுள்ளார். மாலத்தீவு செல்வதாகக் கூறி மொரிசீயஸ் நாட்டுக்குச் சென்றுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட விரோத முதலீடுகள் மற்றும் ரகசியப் பணப் பரிவர்த்தனைகள் மொரிசியஸ் நாட்டின் மூலமாகத்தான் நடக்கும் என ஏற்கனவே ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மத்திய அமலாக்கத்துறை தொழிலதிபர் சிவசங்கரனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் மத்திய மந்திரியாக பொறுப்பேற்கும் ஒருவர் அந்நிய செலாவணி விஷயத்தில் சம்மந்தப்பட்டிருக்கக் கூடாது என்பது மரபு. ஒவ்வொரு மத்திய அமைச்சருக்கும் இந்தியப் புலனாய்வுத்துறை, 'இவர் நல்லவர்' எனச் சான்றிதழ் அளிக்க வேண்டும். ரவீந்திரநாத்தின் மொரிசியஸ் பயணத்திற்குப் பிறகு அதுபோன்ற ஒரு சான்றிதழை இந்தியப் புலனாய்வுத்துறை தருமா? என்பது கேள்விக்குறி என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.
-வணங்காமுடி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)