Skip to main content

போக்குவரத்துத்துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது: துரைமுருகன்

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

 

போக்குவரத்துத்துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது என்று சட்டப்பேரவையில் துரைமுருகன் கூறினார்.
 

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்எல்ஏ கோவி.செழியன் பேசுகையில், போக்குவரத்துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மின்பேருந்து சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என்றார். 

 

Durai Murugan - mini bus




இதற்கு பதில் அளித்துப் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துத்துறை கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் மினி பஸ் தேவையில்லாத ஒன்று என்றார். 
 

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன், கிராமங்களில் உள்ள குறுகிய சாலைகளில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தினாலேயே மினி பஸ் சேவை துவங்கப்பட்டது. எந்த ஜென்மத்திலும் போக்குவரத்து துறை லாபத்தில் இயங்காது. லாப நோக்கம் பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு செயலாற்ற வேண்டும் என்றார்.
 

அப்போது பேசிய விஜயபாஸ்கர், பேருந்துகள் அதிகம் இயங்கும் வழித்தடங்களில் மட்டுமே மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்காத வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க யாரும் முன்வரவில்லை. இதனால் 1500 பர்மிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 



 

சார்ந்த செய்திகள்