மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டபின்பு தேர்தல் களம் மேலும் பரபரப்பானது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாடு வந்தார். காலையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த இவர், மாலை நாகர்கோவிலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
ராகுல்காந்தி பேசும்போது அவருக்கு மொழிபெயர்ப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு இருந்தார். பாஜக தலைவர்கள் தமிழ்நாடு வந்தபோது, அவர்களின் பேச்சை, அந்தக் கட்சியின் மாநில செயலாளரான ஹெச்.ராஜா மொழிபெயர்த்தார். அதுபோல தற்போது வந்திருக்கும் ராகுல்காந்தியின் பேச்சை தங்கபாலு மொழிபெயர்த்தார்.