ADVERTISEMENT

''இது ட்ரைலர் தான்... இன்னும் பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது''-இபிஎஸ் விமர்சனம்!

09:47 PM Apr 02, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதிமுக வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி சொத்து வரி உயர்வு அரசாணையை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் சேலம் தலைவாசலில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ''சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் வரும் காலங்களில் பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன. நகர்ப்புற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்தவர்களுக்கு சிறப்பு பரிசாக 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்வு கிடைத்துள்ளது. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சொத்து வரியா? அல்லது மக்கள் சொத்துக்களைப் பறிக்கும் வரியா? எனக்கேட்டார். தற்பொழுது அவர் கேட்டதே அவருக்குப் பொருத்தமாக இருக்கும்'' என விமர்சனம் செய்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT