திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்க உதவ வேண்டும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps 32.jpg)
சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏவான சுந்தரம், உத்தரமேரூர் தொகுதியில் காலம் முடிந்தும் சில சுங்கச்சாடிவகள் மக்களிடம் பணம் வசூலிக்கின்றன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது பதில் அளித்த முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவைச் சேர்ந்தவர் அமைச்சராக இருந்தபோதுதான் சுங்க சாவடிகள் வந்தன. அதிக எண்ணிக்கையில் எம்பிக்கள் இருப்பதாக திமுக பெருமைப்பட்டுக்கொள்கிறது. தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசி உதவ வேண்டும் என்று கூறினார்.
Follow Us