TTV Dinakaran

Advertisment

ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் பணத்தை டோக்கனாக கொடுத்துவிட்டு ஒவ்வொரு 20 ரூபாய்க்கும் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்படும் என டி.டி.வி. தினகரன் வாக்குறுதி அளித்தார்.

அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டோக்கனாக கொடுத்த 20 ரூபாய்க்கு பணம் எதையும் கொடுக்கவில்லை. இதனால் டோக்கனை கொடுத்து ஏமாற்றி ஜெயித்தார் என ஜெயக்குமார் உள்பட அமைச்சர்கள் அவரை கிண்டல் அடித்து வந்தனர்.

இந்த நிலையில் நாளை ஆர்.கே.நகரில் சுனாமி நினைவு தினத்தை கடைபிடிக்க டி.டி.வி. தினகரன் மீனவர்கள் நிறைந்த காசிமேடு பகுதிக்கு வருகிறார். அந்த பகுதியில் உள்ள அ.ம.மு.க. நிர்வாகிகள் வீடு வீடாக சென்று யார்? யார்? டோக்கனாக 20 ரூபாய் பெற்றீர்கள் என கணக்கு எடுத்து வருகிறார்கள். இது டோக்கன் கொடுத்து ஏமாற்றினார் தினகரன் என்கிற அவப்பெயரை நீக்க முடிவு செய்துவிட்டார் என அவரது கட்சியினர் கூறுகின்றனர்.

Advertisment

20 ரூபாய் நோட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தரப்படும் என செய்தி ஆர்.கே.நகர் முழுவதும் பரவியது. இல்லை, நாளை காசிமேடு பகுதிக்கு தினகரனுக்கு டோக்கனாக கொடுத்த 20 ரூபாயை காட்டி எதிர்ப்பு தெரிவித்துக் கூடாது என்பதற்காக ஒரு கணக்கெடுப்பை அமமுக நிர்வாகிகள் நடத்தியுள்ளனர் என்று சொல்லப்பட்டது.

இன்னொரு பக்கம் அ.ம.மு.க.வே செந்தில்பாலாஜி சென்ற பிறகு செலவுக்கு காசில்லாமல் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் தினகரன் டோக்கனுக்கு காசு கொடுப்பாரா? என்று அ.ம.மு.க. வட்டாரத்திலேயே எதிர்கேள்வி கேட்கப்படுகிறது.

கணக்கெடுப்பு நடத்திய நிர்வாகிகள் திடீரென்று தலைமை கணக்கெடுக்க சொன்னது, கணக்கெடுத்து கொடுத்துள்ளோம் என்று சொல்கிறார்கள். தினகரன் தனது ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிடுவார் மறுபடியும் தேர்தலை சந்திக்க வேண்டுமென்றால் டோக்கன் என்கிற அவப்பெயரை நீக்க வேண்டும் என்பதற்காக தினகரன் இந்த வேலையை செய்கிறாரா? அல்லது இது ஒரு அரசியல் டிரெண்டா? என்கிற கேள்வியை வடசென்னையில் உள்ள அதிமுக வட்டாரங்களில் வேகமாக பேசப்பட்டு வருகிறது.