Advertisment

அதிமுகவை வெற்றி பெற செய்வோம் –லுத்தரன் திருச்சபை ஆயா்கள் கூட்டத்தில் தீா்மானம்

Vellamandi N. Natarajan

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர்கள் மாநாடு மற்றும் கிறிஸ்துமஸ் கூடுகை நிகழ்ச்சி திருச்சி தபால் நிலையம் அருகே உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து 148 ஆயர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

Advertisment

சிறப்புரையாற்றிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. இது கிறிஸ்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் மறைந்த தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட என்னை, சட்டமன்ற உறுப்பினராக்கி, அமைச்சராக உயர்த்திய பெருமை, திருச்சி மாநகர மக்களையும், கிறிஸ்தவ மக்களான உங்களையும் சாரும் என்று தெரிவித்தார்.

Advertisment

Vellamandi N. Natarajan

அவரை தொடர்ந்து பேசிய லூத்தரன் திருச்சபையின் திருச்சி தரங்கை பேராயர் டேனியேல் ஜெயராஜ், தமிழ் லுத்தரன் திருச்சபையில் மூன்றரை இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் உள்ள நிலையில் வருகிற 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, இந்த அரசு மீண்டும் அமைய ஜெபித்தும், ஆசீர்வதித்தும் களப்பணி ஆற்றி, வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும் சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்களை அரசிடமிருந்து முழுமையாகப் பெறுவதற்கு உதவி செய்யுமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.

trichy vellamandi n. natarajan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe