ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - பிற்பகல் 01.00 மணி முன்னிலை நிலவரங்கள்!

01:19 PM May 02, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போது வரை, திமுக கூட்டணி 146 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 87 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

அதிமுக கூட்டணி முன்னிலை நிலவரங்கள்: (01:00PM)

அதிமுக - 76 சட்டமன்றத் தொகுதிகள்.
பாஜக - 4 சட்டமன்றத் தொகுதிகள்.
பாமக - 6 சட்டமன்றத் தொகுதிகள்.
தமாக - 0
பிற கட்சிகள் - 1 சட்டமன்றத் தொகுதி.

திமுக கூட்டணி முன்னிலை நிலவரங்கள்:

திமுக - 116 சட்டமன்றத் தொகுதிகள்.
காங்கிரஸ் -16 சட்டமன்றத் தொகுதிகள்.
விசிக - 3 சட்டமன்றத் தொகுதிகள்.
சிபிஎம் - 2 சட்டமன்றத் தொகுதிகள்.
சிபிஐ - 2 சட்டமன்றத் தொகுதிகள்.
மதிமுக - 4 சட்டமன்றத் தொகுதிகள்.
பிற கட்சிகள் - 3 சட்டமன்றத் தொகுதிகள்.

இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 சட்டமன்றத் தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 2 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிற கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT