Advertisment

150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

tn assembly election results dmk aliance leading

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 152 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 81 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

பிற்பகல் 03.30 மணி நிலவரப்படி, திமுககூட்டணியின் முன்னிலை நிலவரங்கள்:

திமுக - 118

காங்கிரஸ் - 17

மதிமுக - 4

விசிக - 4

சிபிஎம் - 2

சிபிஐ - 2

பிற கட்சிகள் - 5

அதிமுககூட்டணியின் முன்னிலை நிலவரங்கள்:

அதிமுக - 72

பாஜக - 3

பாமக - 5

பிற கட்சிகள் - 1

இதனிடையே, குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் திமுகசார்பில் போட்டியிட்ட ராமச்சந்திரன் 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுகவேட்பாளர் ராமச்சந்திரன் 61,820 வாக்குகளைப் பெற்றார். அதிமுக வேட்பாளர் வினோத் 57,715 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகதலைமையிலான கூட்டணி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

election results tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe