முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலை!

tn assembly election results cm edappadi palaniswami leading

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போது வரை, திமுககூட்டணி 132 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 102 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

அதிமுககூட்டணி முன்னிலை நிலவரங்கள்: (11:35AM)

அதிமுக - 87 சட்டமன்றத் தொகுதிகள்.

பாஜக - 5 சட்டமன்றத் தொகுதிகள்.

பாமக - 9 சட்டமன்றத் தொகுதிகள்.

தமாக - 0

பிற கட்சிகள் - 1சட்டமன்றத் தொகுதி.

திமுககூட்டணி முன்னிலை நிலவரங்கள்:

திமுக - 108 சட்டமன்றத் தொகுதிகள்.

காங்கிரஸ் -12 சட்டமன்றத் தொகுதிகள்.

விசிக - 3 சட்டமன்றத் தொகுதிகள்.

சிபிஎம் - 2 சட்டமன்றத் தொகுதிகள்.

சிபிஐ - 2 சட்டமன்றத் தொகுதிகள்.

மதிமுக - 3 சட்டமன்றத் தொகுதிகள்.

பிற கட்சிகள் - 2 சட்டமன்றத் தொகுதிகள்.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 26,961 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியில் திமுகசார்பில் போட்டியிட்ட சம்பத்குமார் 13,989 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி 40,950 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அதேபோல், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 சட்டமன்றத் தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 2 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிற கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

election results Tamilnadu tn assembly election
இதையும் படியுங்கள்
Subscribe