Advertisment

நடிகையும், வேட்பாளரும் நடனமாடி ஓட்டு சேகரிப்பு! - குஷியில் பெண் வாக்காளர்கள்!

tn assembly election election campaign bjp leader

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. வாக்காளர்களைக் கவர்வதற்காக ஒவ்வொருகட்சியும், அதன் வேட்பாளர்களும் வித்தியாசமான, சுவாரஸ்யமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் சினிமா பிரபலங்களை அதிக அளவில் களத்தில்இறக்கிவிட்டிருப்பது பா.ஜ.க.தான்! அந்த வகையில் அரவக்குறிச்சி தொகுதி தினம் தினம் குஷியில் மிதக்கிறது.

Advertisment

tn assembly election election campaign bjp leader

இந்த அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை. இவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ளார் பிக்பாஸ் புகழ் நடிகை காயத்ரி ரகுராம். மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசு, தமிழகத்திற்குக் கொண்டு வந்துள்ள திட்டங்களைச் சொல்லி, அண்ணாமலைக்காக வாக்கு சேகரித்த காயத்ரி ரகுராம், ஒரு கட்டத்தில் கூட்டத்தில் திரண்டிருந்த பெண்களோடு ஜாலியாக நடனமாடினார். இதனால் அப்பகுதியே ஜாலி மூடுக்கு மாறியது. இந்த நிலையில், வாகனத்தில் நின்றிருந்த அண்ணாமலை கீழே இறங்கி வந்து, காயத்ரி ரகுராமுடனும் அங்கு குழுமியிருந்த பெண்களுடனும் இணைந்து நடனமாடினார். இதனால் அந்தப் பகுதியே கலகலப்பானது.

Advertisment

tn assembly election election campaign bjp leader

"சீரியஸாக நடந்து கொண்டிருக்கும் பிரச்சாரப் பயணங்களுக்கிடையே இப்படிப்பட்ட ரிலாக்சும் வேட்பாளர்களுக்குத் தேவைப்படுகிறது" என்கிறார்கள் பா.ஜ.க.வினர். வேட்பாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் நடன சுவாரஸ்யங்களை தொகுதிவாசிகள் ரசிக்கவே செய்கிறார்கள்.

election campaign Gayathri Raghuram tn assembly election 2021
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe