Advertisment

"ஓ.பி.எஸ். மகனைத்தான் அப்படிச் சொல்கிறார் முதல்வர்" - மு.க.ஸ்டாலின்!

tn assembly election dmk mkstalin speech

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய நாளை (19/03/2021) கடைசி நாள் என்பதால், வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பு அடைந்துள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, இன்று (18/03/2021) சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் குணசேகரன், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் தமிழரசி, காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் ஆகியோரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

Advertisment

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "ஓ.பி.எஸ். மகனை நினைத்து வாரிசு அரசியல் என முதல்வர் பழனிசாமி பேசிவருகிறார். முதல்வர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார்; பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். பதவி கொடுத்தவர்களுக்குத்துரோகம் செய்து பாவம் செய்த முதல்வரைத்தான் கடவுள் தண்டிப்பார்" என்றார்.

'ஸ்டாலினை கடவுள் தண்டிப்பார்' என முதல்வர் கூறிய நிலையில் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

election campaign tn assembly election 2021
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe