tn assembly election dmk and congress parties discussion

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைதொடங்கியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் உம்மன்சாண்டி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், உத்தேசமாக 40 தொகுதிகளின் பட்டியலைத் தயார் செய்து தி.மு.க.விடம் காங்கிரஸ் கொடுக்கவுள்ளது. அதேபோல், ஏற்கனவே வென்ற இடங்களை மீண்டும் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.