மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட டி.டி.வி. தினகரன்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (12/03/2021) காலை தொடங்கிய நிலையில், அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் 130 பேர் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டார்.

அதன்படி, குன்னம்- எஸ். கார்த்திகேயன், அரியலூர்- துரை மணிவேல், திட்டக்குடி (தனி)- கே.தமிழழகன், விருத்தாசலம்- தியாக.ரத்தினராஜன், நெய்வேலி- பக்தரட்சகன், பண்ருட்டி- பி.சக்திவேல், கடலூர்- என்.சுந்திரமூர்த்தி, குறிஞ்சிப்பாடி- ஏ.வசந்தகுமார், வானூர் (தனி)- என்.கணபதி, பெரியகுளம் (தனி)- கதிர்காமு, ஸ்ரீரங்கம்- சாருபாலா தொண்டைமான், ஜெயங்கொண்டம்- ஜெ.கொ.சிவா, பென்னாகரம்- சாம்ராஜ், செங்கம் (தனி)- சி.செல்வம், திருவண்ணாமலை- பஞ்சாட்சரம், கலசப்பாக்கம்- பிரகாஷ், திருவொற்றியூர்- எம்.சௌந்தரபாண்டியன், பல்லாவரம்- தாம்பரம் நாராயணன், துறைமுகம்- சந்தானகிருஷ்ணன், ஆயிரம் விளக்கு- வைத்தியநாதன், அண்ணா நகர்- குணசேகரன், விருகம்பாக்கம்- விதுபாலன், மயிலாப்பூர்- கார்த்திக், வேளச்சேரி- சந்திரபோஸ், சோழிங்கநல்லூர்- முனுசாமி, உதகமண்டலம்- லட்சுமணன், ஆவடி- பா.சீனிவாசன், திருவள்ளூர்- குரு, திருத்தணி- நடராஜன், கும்மிடிப்பூண்டி- ராம்குமார், எழும்பூர் (தனி)- பிரபாகர், கொளத்தூர்- ஆறுமுகம், வில்லிவாக்கம்- ஆனந்தன், திரு.வி.க. நகர் (தனி)- மணிமாறன், ராயபுரம்- ராமஜெயம், செய்யூர் (தனி)- ஐய்யனாரப்பன், மதுராந்தகம் (தனி)- சீனிவாசன், செங்கல்பட்டு- சதீஸ்குமார், ஸ்ரீபெரும்புதூர் (தனி)- இரா.பெருமாள் உள்ளிட்ட 130 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க.வின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 15 பேர், இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 50 பேர், மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 130 பேர் எனத்தற்போது வரை மொத்தம் 195 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

AMMK PARTY tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe