Advertisment

பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த மூன்று தொகுதிகள்

ddd

Advertisment

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிரச்சாரங்களில் வேட்பாளர்களின் அனல் பறக்கும் பேச்சு, அவர்கள் அள்ளி வீசும் இலவசமும் கொடுக்கும் வாக்குறுதிகளும் வாக்காளர்களின் வாக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என்பது நிச்சயமில்லை.

ஆனால் எந்தக் கட்சியாக இருந்தாலும் வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணம்தான் இறுதியாக அந்த வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்க கூடிய மிகப்பெரிய உந்து சக்தியாக உள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் தங்கள் தலைமையிலிருந்து கொடுத்த பகுதியிலிருந்து வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யும் பணி இன்று (01.04.2021) முதல் தொடங்கியுள்ளது.

Advertisment

அதன் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் ஒவ்வொரு குடும்பங்களிலும்இருக்கக் கூடிய வாக்குப் போடும் தகுதியுடைய வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

அதில் திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் மணப்பாறை, கரூர் மாவட்டம் குளித்தலை ஆகிய மூன்று தொகுதிகளில் இன்று முதல் பணம் விநியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகையை பூத் ஸ்லிப் கொடுக்கப்படும் அன்று வழங்கும் திட்டத்தில் அதிமுக உள்ளது.

பணத்தை வைத்து வெற்றியை உறுதிசெய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இந்த தேர்தலில் அதிமுக மிகப்பிரம்மாண்ட செலவில் துவங்கியுள்ளது.

tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe