Advertisment

'அ.தி.மு.க.- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒரே வாக்குறுதிகள்'!

tn assembly election admk and dmk manifesto

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (13/03/2021) வெளியிட்டிருந்த நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை இன்று (14/03/2021) கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.

அ.தி.மு.க.- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரே வாக்குறுதிகள் என்னென்ன? என்பதைப் பார்ப்போம்!

Advertisment

அ.தி.மு.க.- நகரப் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கு 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.

தி.மு.க.- நகரப் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கு முழுமையாக பேருந்து பயணச் சலுகை வழங்கப்படும்.

அ.தி.மு.க.- பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

தி.மு.க.- பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 5, டீசல் லிட்டருக்கு ரூபாய் 4 குறைக்கப்படும்.

அ.தி.மு.க., தி.மு.க.- மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு செய்யப்படும்.

அ.தி.மு.க., தி.மு.க.- 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும்.

அ.தி.மு.க.- 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு பற்றி அறிவிக்கவில்லை.

தி.மு.க.- 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் ரூபாய் 300 வழங்கப்படும்.

அ.தி.மு.க., தி.மு.க.- பழுதடைந்த அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப்படும்.

அ.தி.மு.க., தி.மு.க.- அங்கன்வாடி, அனைத்து நிலை மாணவர்களுக்கும் பால் வழங்கப்படும்.

அ.தி.மு.க.- அரசுப் பள்ளி சுயநிதி மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.

தி.மு.க.- கையடக்க கணினி வழங்கப்படும்.

அ.தி.மு.க.- குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும்.

தி.மு.க.- குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

படிப்படியாக மதுவிலக்கு என அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் தி.மு.க. அதுபற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

manifesto admk tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe