Advertisment

சீட் கிடைக்காத ஓ.பி.எஸ். மகன் என்ன செய்யப் போகிறார்?

ddd

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப். அதிமுக சார்பில் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு அளிக்கப்பட்டிருந்தது. கௌத்தூர், கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயபிரதீப் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு சிலர் விருப்ப மனு அளித்திருந்தனர்.

Advertisment

இந்தநிலையில் கடந்த வாரம் அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதில் ஆறு பேர் கொண்ட பட்டியல் மட்டுமே இருந்தது. இந்தநிலையில் நேற்று (10.03.2021) அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் பெயர் இடம்பெறவில்லை.

Advertisment

கம்பம் தொகுதியில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். இந்தநிலையில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் அவர் என்ன செய்கிறார் என்று விசாரித்தோம்.

போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தமோ, கவலையோ அவரிடம் இல்லை. தனது தந்தை போட்டியிடும் போடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் அனைத்து களப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். வாக்காளர் விவரங்களைத் தனது நுனி விரலில் வைத்துள்ள ஜெயபிரதீப், எந்த இடத்திலாவது தனது தந்தைக்கு அதிருப்தி ஏற்பட்டால், அந்த அதிருப்தியாளர்களை நேரில் சென்று சந்தித்து அதனை சரி செய்வதோடு, மேலும் அவர்களது கோரிக்கை என்ன என்று குறித்து வைத்துக்கொண்டு, உடனே நிறைவேற்றி வருகிறார் என்கின்றனர் ர.ர.க்கள்.

ops tn assembly election 2021
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe