திமுக தலைவர் கலைஞர் காலமானதால் திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 10ஆம் தேதியாகும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 14ஆம் தேதியாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 11ஆம் தேதி நடைபெறுகிறது. ஜனவரி 31ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.