publive-image

தேனி மாவட்ட அதிமுக சார்பில், தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள பயணியர் விடுதியின் முன்பாக இன்று தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் கம்பம் எம்.எல்‌.ஏ. ஜக்கையன் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Advertisment

இதில் பேசிய ஓ.பி.எஸ்., “அடிப்படை உறுப்பினர்களால் தான் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்.ஜி‌ஆரின் கனவை நிறைவேற்றியுள்ளது தற்போதைய தலைமை. இன்றைக்கு எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளின் அடிப்படையில் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இனை ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நெற்றியில் உதய சூரியன் சின்னத்தையும், கையில் திமுக கொடியுடன் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களில் நடித்து திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் தான் எம்.ஜி‌.ஆர். எம்‌.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தான் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் செய்து தரப்பட்டன. அதன் காரணமாக தான் தமிழகத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சி மீண்டும் இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி அமைந்தது. அவரது மறைவுக்கு பிறகு அமைந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரது வழியில் ஆட்சி செய்தார்.‌

Advertisment

publive-image

கொடிய நோயான கரோனா பெருந்தொற்று காலத்திலும் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைந்தது. அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆட்சியை பிடிப்பதற்காக 505 வாக்குறுதிகளை கொடுத்து தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. தமிழகத்தின் நீராதார பிரச்சினையான காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடனானஅணைகளில் தமிழகத்திற்கு உரிமை கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது திமுக அரசு. அதற்கு உதாரணம் தான் அன்மையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தாமல் விட்டுக் கொடுத்தது.

தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க அதிமுக போராட்டம் நடத்தியதால் தான் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 4 முறை 142 அடியாக உயர்த்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம், நீட் தேர்வை ரத்து செய்வோம், துப்புரவு பணியாளர்களுக்கு ரூபாய் 5,000 நிவாரணம் வழங்குவோம் என, ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தான் தரப்போறாரு என பாட்டுப் பாடி ஸ்டாலின், கனிமொழி, உதய நிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.‌ ஆனால் ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தும், அதனை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.‌ போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தகுந்த சீருடைகள் வழங்காமல் உள்ளது. அரசு ஊழியர்கள் எங்கள் நண்பன் எனச் சொல்லி வாக்கு வாங்கிய திமுக அரசு தற்போது அவர்களை ஏமாற்றி வருகிறது. எனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து விரைவில் போராடுவார்கள். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்” என்று பேசினார்.

Advertisment