thrid phase candidates list announced by pmk party

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், மூன்றாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் வரும் 06/04/2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், 19 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டுபட்டியல்கள் நேற்று (10/03/2021) வெளியிடப்பட்டன. மீதமுள்ள கீழ்க்கண்ட 4 தொகுதிகளில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள்அடங்கிய மூன்றாவது பட்டியல், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.

thrid phase candidates list announced by pmk party

Advertisment

அதன்படி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் சதாசிவம், பூந்தமல்லி (தனி) சட்டமன்றத் தொகுதியில் இராஜமன்னார், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மருத்துவர்.இராஜா, வந்தவாசி (தனி) சட்டமன்றத் தொகுதியில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்"இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.