Dindigul

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 30 நாட்களாக திமுகவினர் பம்பரம்போல் சுழன்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

இதில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி கரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியவுடன் முதல் கட்டமாக முக கவசம் மற்றும் கிருமி நாசினி, மருந்துகள், சோப்புகளை தூய்மை பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினார். பின்னர் தனது ஆத்தூர் பகுதியில் உள்ள ஐந்து பேரூராட்சி 46 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைபணியாளர்களுக்கும், தூய்மை காவலர்களுக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும் அரிசி மூட்டைகளை வழங்கினார்.

Advertisment

அதன் பின்னர் வறுமையில் வாடும் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அவர்களுக்கும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். அதன் பின்பு மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வண்ணம் தொடங்கி வைத்த ஒன்றிணைவோம் வா என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கும்போது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் கடந்த 30 நாட்களாக ஆத்தூர் தொகுதியில் வெளியில் தலைகாட்டாத அதிமுகவினர் பொதுமக்கள் நலன் கருதி முக கவசம் கூட கொடுக்காமல், விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் சின்னாளபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குகிறோம் என கூறியவுடன் தூய்மை பணியாளர்கள் காலை வேலையை முடித்துக் கொண்டு பேரூராட்சி வளாகத்தில் காத்துக் கிடந்தனர்.

அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் பி.கே.டி. நடராஜன் தூய்மைபணியாளருக்கு கையில் மூணு கிலோ அரிசி, கால் கிலோ பருப்பு, ஒரு கிலோ உப்பு ஆகியவற்றைநிவாரண உதவியாக வழங்கியதை கண்டு தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் மட்டுமல்லாமல், இதை கொடுக்க பல மணிநேரம் காக்கவைத்தனர் என்று புலம்பி தள்ளினார்கள்.

Advertisment