Advertisment

‘தாலி இங்கே தங்கம் எங்கே? ஆயிரம் ரூபாய் என்னாச்சி?’-பாஜக அண்ணாமலை தலைமையில் போராட்டம்!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களை ஏமாற்றும் விதமாக உள்ளதாகக் கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் தமிழக பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த தமிழக அரசு அதனை நிறைவேற்றவில்லை அதற்கான எந்த அறிவிப்பும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 'தாலி இங்கே தங்கம் எங்கே', 'ஆயிரம் ரூபாய் என்னாச்சி' போன்ற பதாகைகளை வைத்துக்கொண்டு பாஜகவினர் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Advertisment

Annamalai tamilnadu budjet TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe