/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/117_14.jpg)
'பாரதப்பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் புதிய இந்தியா-2022' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று பாஜக தலைமையகமான கமலாயத்தில் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட்டார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ், பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய எப்போதும் ஆட்கள் தயாராக உள்ளனர். பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களை குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள்" எனத் தெரிவித்தார். கே.பாக்யராஜின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக எழுந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், தற்போது கே.பாக்யராஜ் தெரிவித்திருக்கும் கருத்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)