சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் கடந்த ஒரு வாரமாக சிதம்பரம் தொகுதியில் முகாமிட்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளையும், சமூக ரீதியான தலைவர்கள் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனை தொடர்ந்து தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் தொடர்ந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுப்பட்டுவருகிறார்.

Advertisment

thol thirumavalavan visited chidambaram temple

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் சனிக்கிழமை (இன்று) சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திருமாவளவன் வந்தார். அவரை கோயில் தீட்சதர்கள் வரவேற்று சால்வை அணிவித்தனர். தொடர்ந்து நடராஜர் கோயில் சித்சபைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் "கடந்த இருதேர்தல்களில் நான் வாக்கு சேகரிப்பிற்கு வாகனத்தில் செல்லும்போது மர்ம நபர்கள் என் கார் மீது கல் வீச்சு போன்ற சம்பங்கள் நடத்தியுள்ளனர்.

Advertisment

இதனால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என உயர் நீதி மன்றத்தில் ஆயுதம் ஏந்திய போலிஸார் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன். தற்போது தேர்தல் காலம் பரப்புரைக்கு செல்லும் நேரத்தில் இதுபோன்ற அச்சுறுத்தல் சம்பவத்தை தடுப்பதற்கு வழக்கை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு பற்றி பேசி வருகிறார். மத்திய அரசில் 37 எம்பி பலத்துடன் இருந்தபோது அதுபற்றி எதும் கூறியது இல்லை. தற்போது தேர்தலை மனதில் வைத்து அவர் பேசி வருகிறார். முதலில் அவர் தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள் அறுகளும் வற்றாமல் இருந்து நிலத்தடி நீர்மட்டம் உயரம். துரைமுருகன் வீட்டில் ரெய்டு என்பது அதிகாரித்தை வைத்துக்கொண்டு அச்சுறுத்தவே இதுபோன்ற செயல்களை மோடியின் தலைமையிலான மத்திய அரசு செய்துவருகிறது. சிதம்பரம் தொகுதி மக்களின் கோரிக்கைகள்அனைத்தும் நிறைவேற பாடுபடுவேன்" இவ்வாறு அவர் கூறினார். அவருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.