Thol Thirumavalavan MP says Bars can be closed in one day

மதுவிலக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.கவினரும் பங்கேற்கலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்திருந்தார். அதே சமயம் அவர் அ.தி.மு.கவிற்கு அழைப்பு விடுத்திருந்தது, திருமாவளவன் தி.மு.கவில் இருந்து பிரிந்து அ.தி.மு.கவோடு கூட்டணி வைக்கப்போகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளானது. இதற்குக் கூட்டணியைச் சார்ந்தவர்கள், கூட்டணியைச் சாராதவர்கள் எனப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்த விவகாரம் அடங்குவதற்குள், ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்’ என்று 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியது. அதோடு அந்த வீடியோ உடனடியாக டெலிட் செய்யப்பட்டிருந்ததது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அந்த வகையில் 2 முறை வீடியோவை பதிவிட்டு நீக்கிய நிலையில், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனும் வீடியோவை 3வது முறையாக மீண்டும் திருமாவளவனின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு பேசுபொருளானது.

Advertisment

Thol Thirumavalavan MP says Bars can be closed in one day

இத்தகைய சூழலில் தான் அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, தொல். திருமாவளவன் கடந்த 16 ஆம் தேதி (16.09.2024) அண்ணா அறிவாயலத்தில் சந்தித்து அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அப்போது திமுக சார்பில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என உறுதியளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த மாநாடு குறித்து மதுவை ஒழிப்போம் மனிதவளம் காப்போம்’ எனக் குறிப்பிட்டு தொல்.திருமாவளவன் காணொளிகளைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “உணர்வுப் பூர்வமான பிரச்சனையில் கை வைத்துள்ளோம். இது மற்ற மாநாடுகளைப் போல இது சாதாரண மாநாடு என்று நினைத்துவிடக் கூடாது. அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம் என்பார்கள். அதேசமயம் மதுவை ஒழிக்க விடாமல் பார்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளும் நடக்கும். இது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இது தான் நிலைமை. எந்த கட்சியைக் கேட்டாலும், மது என்பது தவறானது தான். மதுவை ஒழிக்க வேண்டும். ஒரு கட்சிகூட மது இருப்பதால் என்ன தவறு, மதுக் கடைகள் இருப்பதால் என்ன தப்பு என்று சொல்ல வாய்ப்பே இல்லை.

Advertisment

Thol Thirumavalavan MP says Bars can be closed in one day

எல்லாக் கட்சிகளும் மது வேண்டாம். போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன. இதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன?. அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்!. இந்திய அரசே! தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு!. மதுவிலக்கு சட்டத்தை இயற்று!. தமிழ்நாடு அரசே! மதுக்கடைகளை இழுத்து மூடு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.