சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், வணிகர் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் வணிகர்களை சந்தித்து மோடியின் ஆட்சியில் எவ்வாறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று விளக்கி கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

Advertisment

thol thirumavalavan met traders in chidambaram

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் சிதம்பரம் வர்த்தக சங்க அலுவலகத்தில் வர்த்தக சங்க தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வணிகர்களிடம் திருமாவளவன் வாக்கு சேகரித்தபோது அருகில் திமுக முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் வர்த்தகசங்க செயலாளர் முருகப்பன், நகரின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து சிதம்பரம் பெரிய மார்கெட், தெற்குவீதி, மேலவீதி உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்தார்.