Advertisment

பினராயி விஜயனுக்கு நெருக்கடி தருவது சங்பரிவார் மற்றும் பாரதீய ஜனதா கட்சி: திருமாவளவன்

Thol. Thirumavalavan

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர், ''சபரிமலை தீர்ப்பு பாலின சமத்துவம் தொடர்பான தீர்ப்பு. இந்த பிரச்சினையில் பெண்கள் என்ற வகையில் தான் பார்க்க வேண்டுமே தவிர மதம், சாதி, கட்சி, இயக்கம் என்ற பின்னணிகளை இதில் பொருத்தி பார்க்க தேவையில்லை.

Advertisment

ஐயப்ப பக்தர்களில் ஆண்களில் கூட பிற மதத்தையோ கட்சியோ சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும் சூழலில் வழிபட வந்தவர்களை கேரள அரசும் காவல்துறையும் திருப்பி அனுப்பியது சட்டப்பூர்வ அனுகுமுறை அல்ல

.

கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதே பொறுப்பும் கடமையும். அதை நடைமுறைப்படுத்த விடாமல் பினராயி விஜயனுக்கு நெருக்கடி தருவது சங்பரிவார் மற்றும் பாரதீய ஜனதா கட்சி.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதரீதியிலான வாக்கு வங்கி திரட்டுவதற்காக சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மாற்றுமத பெண்கள் வந்தார்கள் என்பதற்காக பாஜக பிற மத பெண்களை அங்கு அனுப்பி வைத்து குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

சபரிமலைக்கு செல்ல முயன்ற ரிஹானா என்ற பெண் பாஜக அமைச்சர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவர்களுடன் படமெடுத்து கொண்டவர். ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக வை சேர்ந்தவர்கள் அது போன்ற பெண்களை சபரிமலைக்கு அனுப்பி வைத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் தான் நீதிபதிகள் இத்தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள். பாரம்பரியம் மற்றும் ஐதீகம் என்ற பெயரால் சமத்துவத்திற்கு எதிரான போக்கை அனுமதிக்க முடியாது

.

வைரமுத்து மீதான புகார் தொடர்பாக விசாரிக்க திரைப்பட துறையில் குழு அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது.இதனை விசாரிக்க அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆண்களுக்கு எதிரான தாக்குதல் என அணுக முடியாது. இது போன்ற புகார்களை கவனிக்க, ஆராய்ந்து உண்மை நிலையை கண்டறிய மத்திய மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும்.

பெண் ஒடுக்குமுறையின் எதிர்விளைவுதான் மீ டூ. பெண்கள் தங்கள் வலிகளையும் வடுக்களையும் பதிவு செய்யும் களமாகத்தான் இதை பார்க்க வேண்டும. மீடூ வில் பெண்களின் பல ஆண்டு தாமதமான கருத்து பதிவு குறித்து, அன்று பேசக்கூடிய துணைச்சல் சூழல் இல்லாமல் இருந்திருக்கலாம். அந்த வலியும் வடுவும் கடுமையாக இருந்திருக்கலாம்'' என கருத்து தெரிவித்தார்.

sabarimalai Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe