Thiruvannamalai DMK candidate valu office and college IT Raid

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தும் முடிந்து சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சில நாட்களாக வேட்பாளர்களின் வீடுகளிலும், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

Thiruvannamalai DMK candidate valu office and college IT Raid

இந்த நிலையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவின் அலுவலகம், கல்லூரி, நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதேவேளையில், எ.வ.வேலுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மு.க.ஸ்டாலின்திருவண்ணாமலை சென்றிருந்தார். அவர், எ.வ.வேலுவின் கல்லூரியில் தங்கியிருந்தார். சோதனையிட வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், எ.வ.வேலுவின் கல்லூரியில் நின்றிருந்த மு.க.ஸ்டாலினின் பிரச்சார வாகனத்தையும் சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது அங்கிருந்த திமுகவினர் வருமான வரித்துறையினரைத் தடுக்க முற்பட்டனர். அதற்கு ஸ்டாலின், “விடுங்க,அவங்க சோதனை செய்யட்டும். அது அவங்க வேலை” என்று வருமான வரித்துறையினரை சோதனை செய்ய வைத்தார்.

Advertisment